Slide # 1

Slide # 1

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts Read More

Slide # 2

Slide # 2

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts Read More

Slide # 3

Slide # 3

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts Read More

Slide # 4

Slide # 4

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts Read More

Slide # 5

Slide # 5

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts Read More

Saturday, January 12, 2019

Failan korean movie tamil review

Failan
வெளியான வருடம் - 2001
மொழி  - கொரியன்
வகை  - காதல்
Imdb 7.7 / 10
Movie link:click
ஒரு காதல் கதையில் கட்டிப்பிடிக்கல,
முத்தம் கொடுக்கல, பேசிக்கிறல, மொத்தத்துல பார்த்துக்கவேயில்லை.
இந்த மாதிரி சின்ன, சின்ன விசயத்துல தானே காதலின் அழகே இருக்கு. இப்படி எதுவுமேல்லாம ஒரு ரொமான்ஸ் படத்தை எடுத்தா எப்பிடி இருக்கும். அப்படியே எடுத்தாலும் எந்த அளவுக்கு
ரொமாண்டிக்கா இருந்திடப்போகுது?
இந்த படத்தை பாருங்க அதன் தாக்கத்திலிருந்து வெளிவர சில நாட்களாவதாகும்....!

Kang-Jae (ஹீரோ) இரக்கமே இல்லாத
ஒரு மோசமான கேங்ஸ்டார்கிட்ட
அடியாளா வேலைபார்க்குறான். ரவுடியா இருந்ததுக்கு என்னா இளகியமனசுகாரன்
தன் பேச்சுலையும், செய்கைளையும் தன்னை மோசமானவனா காட்டிக்க பிரயத்தனம் பட்டத்துக்கு அவனுக்குள்ள இருக்க இரக்க குணம் அவனை கடுமையாக நடந்துக்க விடுறது இல்லை. ஒரு தடவை மாமூல் வசூலிக்க போன இடத்துல ஒரு வயசான அம்மாவ பாவம் பார்த்து, அடி வாங்கி சக ரவுடிங்ககிட்ட அசிங்க படுவான். இந்த மாதிரி விஷயங்கள் boss க்கு தெரியவர "நீ இப்பிடி இருந்தா நம்ம பண்ணுர வேலைக்கு சரிபட்டு வராது" உன்ன மாத்திக்கனு கடுமையா சொல்லிடுவான். என்ன பண்ண அவனுக்கும் இந்த வேலை பிடிக்கல ஆனால் காசுக்காக பண்ணவேண்டிய நிலைமை.

ஒரு சமயத்துல boss பண்ணுற கொலைக்கு இவனை பழி ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போக சொல்லுறான். தண்டனை காலம் பத்து வருஷம். kong-jae யோசிக்கிறான், அப்போ boss சொல்லுவான் இத எனக்காக பண்ணுன்னா நீ ஆசைபட்ட மீன்பிடிபடகு வாங்க சிலவாகும் முழு காசும் தாறேன் உன் ஊருல உனக்கு பிடிச்சமாறி வாழமுடியுனு சொல்ல, Kang-jae க்கு வாழ்நாள் கனவு அந்த படகு இத விட்டா வேற வாய்ப்பு கிடைக்காது, அதேநேரம் boss கிட்ட நல்ல பெயரும் கிடைக்கும் ஆனால் கூலியா பத்து வருஷத்த குடுக்கணும். ரொம்ப யோசிச்சு பார்த்துட்டு கடைசில சரின்னு ஒத்துகிறான்.

மறு நாள் kang-jae வீட்டுல இருக்கும் போது அறைக்கதவு தட்டப்படுது போய்ட்டு கதவை திறந்தா வெளிய ரெண்டு போலீஸ்காரங்க, உங்க பேரு தானே kang-jae னு கேட்க ஆமானு சொல்லுறான். உங்க பொண்டாட்டி failan இறந்துட்டாங்கனு சொல்லக்கேட்டு அதிர்ச்சி ஆகி நிக்கிறான் !

(ஹீரோக்கு கல்யாணமான விஷயம் தெரியாதுல? கீழே படிங்க...)

கதைஇப்ப ஒரு வருஷம் பின்னே போகுது

இந்த இடத்துல இருந்து தான் இயக்குனர் failan (ஹீரோயின்) அறிமுக படுத்துறாரு. அம்மா செத்த பிறகு சீனாவில் இருந்து
தென் கொரியாவுல இருக்க ஆன்ட்டி (aunt) வீட்டுக்கு வாறா, அங்க வந்த பிறகு தான் தெரியவருது அவங்க கனடாவுக்கு குடிபெயர்ந்து ரெண்டு வருசமாகுதுன்னு. சின்ன பொண்ணு வேறயாரும் தெரிஞ்சவங்களும் இல்லை பாவம் ஆனாதரவாகிட்டா. என்ன பண்ணுறதுனு தெரியாம, அங்க உள்ள வேலை தேடிதரும் ஒரு ஏஜென்சிகிட்ட போய்ட்டு வேலைக்கேட்க, உனக்கு இருக்கது டூரிஸ்ட் விசா, இந்த நாட்டு சட்டப்படி நீ இங்க யாரையாச்சும் கல்யாணம் பண்ணுனாத்தான் தங்கி வேலை பார்க்க அனுமதி கிடைக்குனு சொல்ல வேற வழி இல்லாம அவ பேப்பர் மேரேஜ்க்கு சம்மதிக்கிறா. (Paper marriage ன்னா சட்டப்படி பதிவு திருமணம் தான் ஆனால் அரசாங்கத்த ஏமாத்திட கையாளும் ஒரு உத்தி, நிஜத்துல சேர்ந்து வாழ போறது இல்லை) ஏஜென்சியாலேயே ஆள் ஒருத்தனையும் ரெடி பண்ணுறாங்க.
அவன் தான் நம்ம கதாநாயகன் kang-jae. வருவான் கையெழுத்த போடுறான், காச வாங்கிட்டு போயிடுறான். Failan முகத்தை கூட பார்க்கல அதுக்கு அவசியமும் இல்லை எல்லாம் ஒரு நாடகம் தானே.

ரயில் பயணத்துல மேல சொன்னதேல்லாம் மனசுல நினைச்சிகிட்டே, சட்ட ரீதியாக
failan னுடைய பிணத்தை பொறுப்பேத்துக்க அவள் வேலை செஞ்ச ஊருக்கு போறான். அந்த பயணத்தின் போது அவ இவனுக்கு எழுதுன கடிதங்கள் மற்றும் கேள்விப்பட்ட விஷயங்கள் மூலமா அவளுடைய சோகம், தனிமை, நோய், வாழ்கைல சந்திச்ச பிரச்னைகள் எல்லாம் தெரிய வருது.
தன் மேல வச்சிருந்த நேசத்தையும்
உணர முடியுது. நான் காசுக்காகவும்,
அவள் வேலைக்காகவும் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்படியிருந்தும் இவ ஏன் என்மேல உயிரா இருந்துருக்கா? நினைச்சுப்பார்க்கும் போது அவனையும்
மீறி மனசு தவிக்கிறத தடுக்க முடியல!

Failan க்கு உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லாத நேரத்துல, பெயரலவில் மட்டும் கணவனா இருக்க kang-jae நேசிக்க தொடங்குறா, தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த ஒரு காரணமே
காதலா மாறிடுது. அவ உலகத்துல அவன் மட்டும் தான். தனிச்சு நிற்கும் போது அன்புக்கு ஏங்குறது இயற்கை தானே !?
வேலை நேரம் போக ஒய்வு நேரத்துல
கடிதம் எழுதி அனுப்புறது, பதிலுக்கு காத்துட்டுருக்கதுமா காலம் ஓடுத்து.
"நீ ரொம்ப நல்லவன், ஏன்னா? எனக்கு வாழ்கை தந்தனால" எல்லா கடிதங்களிலும் இந்த ஒரு வரி காட்டாயம் இருக்கும்., பாவம்.....! என்னைக்காச்சும் ஒரு நாள் தன்னை தேடி வருவான்னு நம்பிகிட்டு இருந்தா.

மருத்துவமனைக்கு kang-jae, போய்ட்டு காத்திட்டு இருக்கும் போது நர்ஸ் அவள் உடலை ஸ்ட்ரெச்சர்ல வைச்சி தள்ளிக்கிட்டு வருவா. அவன் நெஞ்சு பக்கு, பக்குனு அடிச்சுக்கிது உயிரா நேசிச்ச ஒருத்தர இழந்தா எந்த அளவுக்கு வேதனையும், சோகமும் இருக்குமோ,, அந்த அளவுக்கு அவன் மனசு கஷ்டப்படுத்து அவனை அறியாமலே failan நேசிக்க ஆரம்பிசிட்டான். "உயிரோட இருக்கும் போது ஒரு நாள் சரி நான் பார்க்க வருவேன்னு எதிர்பார்த்துட்டு இருத்திருப்ப, கடைசில நீ இந்த
உலகத்தை விட்டு போன பிறகு உன்ன பார்க்குபடியாகிடுச்சி"
அவள் முகத்தை பார்க்கும் போது இந்த வார்த்தைகளை அவன் கண்ணு பேசும்.

சில மாதங்களுக்கு முன்பு
Failan இவனை பார்க்க போயிருப்பா, தூரத்துல இருந்து பார்த்து ரசிச்சிக்கிட்டு பக்கத்துல போய்ட்டு பேச முடியாம வெட்கம் கலந்த பயத்துல தடுமாறிகிட்டு இருப்பா அப்போ, திடிர்னு பொலிஸ் வந்து kang-jae பிடிச்சு இழுத்துட்டு போகும். அந்த சமயத்துல failan ன கடந்து போகும்போது அவளை யாரோ மாதிரி பாத்துட்டு போவான். அவனுக்கு தான் உண்மையாவே தெரியாதே. ஆனால் Failan போட்டோவுல இவனை பாத்துருக்கா, முதல் தடவை நேர்ல அதுவும் பக்கத்துல பார்ப்பா கேட்டநேரம் பேச முடியாத படி விதி செஞ்சிடும்.

ஹீரோ ஹாஸ்பிடல்ல பிணமா ஹீரோயின பாக்குறதும். போலீஸ் ஹீரோவ பிடிச்சிட்டு போகும்போது ஹீரோயின நேர்ல சந்திக்கிற காட்சியும் இரு வேறு காலங்களில் நடந்த சம்பவம். Non linear முறையில் சொல்லப்பட்டிருக்கும் கதையில் ரெண்டு காட்சிகளும் அழகான முறையில் தொகுக்கபட்டு நமக்கு அடுத்தடுத்து நிகழ்வது போல இருக்கும். அந்த காட்சிய பார்க்கும் போது நம்ம மனசுல வரும் பாருங்க ஒரு வலி ! வார்த்தைகள் கொண்டு உயிர்ப்பிக்க எனக்கு தெரியல படத்தை பார்த்து நீங்களே பீல் பண்ணுங்க....!

Failan னா (Cecilia Cheung) நடிச்சுருக்க பொண்ணு அழகா பண்ணிருக்கா, அவ பேச வேண்டிய டயலாக் எல்லாத்தையும் முகமே பேசிடும். Kang-jae (Min-sik choi) இவர பத்தி என்னத்த சொல்ல ? எந்த கதாபாத்திரமா நடிச்சாலும் வெளுத்து வாங்கிறாரு Oldboy,
I saw the devil படம் பார்த்தவங்க நான் சொல்லுறத ஒத்துப்பிங்கனு நினைக்கிறேன். இயக்குனர் Hae-sung song ஹீரோ, ஹீரோயினை பக்கத்துல நெருங்கவிடாமலே காதல் ரசம் ததும்ப இந்த படத்தை இயக்கிருக்காரு, எப்படி அந்த வித்தை செஞ்சாருன்னு புரியல. படத்தொகுப்பு (editing) பற்றி சொல்லியே ஆகணும் Cuts எல்லாம் Perfect, ஒவ்வொரு Frame மும் கதையோட ஆழத்தை நமக்கு கடத்தி படத்தை மெருக்கூட்டியிருக்குனு சொல்லலாம்.

The chaser tamil dubbed movie tamil review

படத்தின் பெயர் -  The Chaser
வெளிவந்த ஆண்டு  -  2008
மொழி - கொரியன்
IMDB Rating -  7.9 / 10

The chaser...

படத்தோட ஒன்லைன்....

தன்னால் பாலியல் தொழிலுக்கு அனுப்பப்பட்ட பெண்கள் மாயமாக மறைய அவர்களுக்கு என்னாவாயிற்று என்பதை கதாநாயகன் கண்டுபிடித்து மீட்டாரா இல்லையா என்பதே கதை

கொரியன் மூவி இது....
Movie link: click and video substitle

ஒரு கதாநாயகன் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது போல நம்மூரில் நடிப்பார்களா...?
இரண்டு பெண்கள் காணாமல் போய்விட்டார்கள் என குழம்பியிருக்கும் வேளையில் மறுநாளும் பெண் வேணும் என கால் வரும் அனுப்புவதாக சொல்லிவிட்டு போன் நம்பரை செக் பண்ண காணாமல் போன பெண்களை அழைத்து சென்றவன் தான் இன்றும் கேட்கிறான் எனத் தெரியவரும்...

நாயகன் முன்னால் போலீஸ் வேறு ... வேலையை விட்டு வெளியேறி இந்த தொழிலை பண்ணிக்கொண்டிருப்பான்...
மூன்றாவதாக ஒரு பெண்ணை அனுப்பி அவள் மூலம் காணாமல் போனவர்களை மீட்கலாம் என முடிவு செய்து ஒரு பெண்ணை அனுப்புவான் ...

அதன் பின்னர் மூன்றாவதாக போன பெண்மூலம் அவர்களை கண்டு பிடித்தானா அல்லது இவளுக்கே ஆபத்தா என்பதே கதை....
நாயகன் ஒரு மாமா என்றாலும் தொலைந்து போன பெண்களை மீட்க உயிரைக் கொடுத்துப் போராடுவான்....

வில்லனோ ஒரு சைக்கோ கில்லார்....

அவனிடம் மாட்டிய பெண்ணை சாதரணமாகக் கொல்ல மாட்டான் ஒரு பெரிய திருப்புளி அதை அவர்கள் தலையில் வைத்து சுத்தியலால் அடித்து இறக்கிக் கொல்வான்.....

நாயகனுக்கும் சரி வில்லனுக்கும் சரி செமத்தியான ரோல்...

நாயகனுக்கோ மூன்றாவதாக தொலைந்து போன பெண்ணுக்கு ஒரு குழந்தை இருக்கும் அவளை காணும் போதெல்லாம் வில்லனை புரட்டி எடுப்பான் உணர்ச்சி பிழம்பாய் இருக்கும்..

ஒரு கடையில சிகரட் வாங்க போயிட்டு ரெண்டு கொலை பண்ணிவிட்டு வரக்கூடிய வில்லன்
இவங்க ரெண்டு பேரும் இறுதிக்காட்சியில் நடக்கும் வாழ்வா சாவா சண்டைக்கு அரண்டு போயிருவோம்

மொத்த படமும் விறுவிறுப்பு இறுதிக்காட்சி இன்னும் நெருப்பு

படம் துவங்கி 5 நிமிடத்துல் துவங்கும் துரத்தல் முடியும் வரை இருக்கும்....

அதிகமான வன்முறை ...

மறக்க முடியாத படம்....

இந்த படம் பெற்ற விருதுகளும் கலந்து கொண்ட திரைவிழாக்களும் படிச்சா

மயக்கமே வருது... அவ்ளோ விழாக்களில் கலந்திருக்கவும் விருதும் வாங்கியிருக்கு.

Friday, January 11, 2019

The guilty tamil dubbed

வெகு சில படங்களே இமை சிமிட்ட கூட நமக்கு நேரம் கொடுக்காமல் சீட் நுனியில் அமர வைக்கும், அதுவும் 1.25 மணி நேரம்.

பொதுவாக ஆங்கிலம் தவிர வெளிநாட்டு படங்களை பார்ப்பதில்லை. ஒரு விளம்பரம் பார்த்து இது ஆங்கில படம் என்று நினைத்து தான் பார்க்க ஆரம்பித்தேன், அப்புறம் தான் டேனிஷ் மொழிப்படம் என்று விளங்கியது. Subtitles முக்கியம் அமைச்சரே.

படத்தில் மொத்தமே ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே Asger Holm(Jakob Cedergren), காவல்துறை கட்டுப்பட்டு 112 அறை ஊழியர், மற்றவர்கள் உடன் வேலை செய்கிறவர்கள்.
Movie Link:click link

ஒரு பெண்ணிடம் இருந்து கால் வருகிறது தன்னை கடத்தி செல்கிறார்கள் என்று, அதன் பின்னே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

விரிவாக சொன்னால் படத்தின் சுவாரசியம் போய் விடும், so படத்தை பார்க்கவும்.

மொத்தமே 2 அறைகள், 1 கதாபாத்திரம், மற்றும் தொலைபேசி அழைப்புகள், இதை வைத்துக்கொண்டு இப்படி ஒரு திரில்லர் படத்தை எடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அசத்திவிட்டார் இயக்குனர் Gustav Möller.

படத்தில் original score (இசை) மிக முக்கியம் ஆதலால் மடிக்கண்ணியில் பார்த்தால் நல்ல ஹெட்போன் அவசியம். தொலைக்காட்சியில் என்றால் நல்ல சவுண்ட் சிஸ்டம் வேண்டும் (சின்ன சின்ன சத்தமும் கதையுடன் பயணிக்கும்)

The other me ( English Title ) tamil

Eteros ego (Greece Title)

The other me  ( English Title )
Movie link:click
ஒவ்வொரு காட்சியும் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கும் தரமான கிரைம் திரில்லர் திரைப்படம். இந்த படத்தில் டைட்டில் போடும் போது வரும் காட்சியில் எனக்கு தூக்கி வாரி போட்டது அப்படி ஒரு காட்சி அது .

படத்தின் இயக்குனர் கணித மேதை என்று நினைக்கிறேன் அது ஏன் என்று உங்களுக்கு படம் பார்க்கும் போது தெரியும்.


ஐந்து கொலைகள் நடக்கிறது ஒவ்வொரு கொலைகள் நடக்கும் போதும் ஒரு நம்பரை விட்டு செல்கிறார்கள்.

கிரிமினாலஜி ஆசிரியர் ஒருவர் இந்த சிக்கலான கொலையை கண்டு பிடிக்க வருகிறார், அவர் இந்த கொலையை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் nail biting என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் அது போல தான் யார் கொலையாளி என்று பார்க்கும் நமக்கு ஆவலுடன் இருக்கும் நம் யூகங்கள் யாவும் இந்த படத்தில் செல்லுபடியாகாது .

இறுதி வரை அந்த சஸ்பென்ஸ் குறையாமல் திரைக்கதை செல்லும்
முதல் காட்சியில் உண்மையாகவே மிரட்டி விட்டார்கள்.

இந்த படத்தை திரையரங்கில் திரையிட கூடாது என்று அந்த அரசாங்கம் தடை விதித்தது , படத்தை பார்த்த ஒருவன் Taxi driver யை கொலை செய்துவிட்டான்

படத்தில் கொடூர கொலைகள் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இதுபோன்ற எந்த ஒரு காட்சியும் இல்லை. ஆனால் திரில்லர் படத்தில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும் seat edge திரில்லர்